பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நடைபெறும் மாதாந்திர நிகழ்ச்சிகளை, புத்தகமாக வெளியிட, அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,195 கோவில்கள் உள்ளன. இவற்றில், 56 கோவில்கள் பிரதான கோவில்களாக உள்ளன. இவற்றில், வைணவகோவில்களை தவிர, இதர கோவில்களில் நடைபெறும் மாதாந்திர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,புத்தகமாக வெளியிட, அறநிலையத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, முதல் கட்டமாக, உபயதாரர்களை தேர்வு செய்யும்பணி நடந்து வருகிறது.