பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
புரி: புகழ்பெற்ற, புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை நேற்று துவங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் ரத யாத்திரை, உலக புகழ்பெற்றது. 1,000 ஆண்டுகளுக்கும் மேல், பழமை வாய்ந்த, வண்ண மயமான தேர் திருவிழா, நேற்று காலை, மக்களின் ஆரவார உற்சாகத்துடன் துவங்கியது. புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக, ஜெகநாதர் கோவிலை சுற்றி, கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ரத யாத்திரையில், லட்சக்கணக்கான பக்தர்கள், வீதி உலா வந்தனர்.