பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின், சேலம் கிளையின் சார்பில், நேற்று பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரை திரு வீதி உலா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சேலத்தில், ஜெகந்நாதரின் ரத யாத்திரை திருவிழா நேற்று நடந்தது. சேலம் பட்டை கோவிலில் இருந்து ரதயாத்திரை துவங்கியது. முதல் அக்ரஹாரம், கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு, புதிய பஸ் ஸ்டாண்டு, ஐந்து ரோடு வழியாக சோனா கல்லூரி வளாகத்தை அடைந்தது. சேலம் இஸ்கான் கோவில் நிர்வாகி ஸ்ரீனிவாஸ கிருஷ்ணா தாஸ் தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ரதயாத்திரை சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்ததை அடுத்து பஜனை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடர் ஹரிபாத பிரபு, அவரது துணைவியாருடன் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.தொடர்ந்து ஜெகநாத லீலை, ஹரிதாஸ் தாக்கூரின் நாடகம், சிறப்பு பூஜை, ஆரத்தி மேற் கொள்ளப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.