பெண்களின் சபரிமலை என போற்றப்படுவது, கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதிகோயில். பெண்களின் உடல்நலம், மனநலம் காப்பதில் ஈடுஇணையற்றவளாக இங்குள்ள அம்பிகை விளங்குகிறாள். கேரளப்பெண்கள் 41நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்குச் செல்வர். மனதில் எண்ணியது நிறைவேற அம்மனுக்கு வில்லுப்பாட்டைக் காணிக்கையாக நடத்துவர். இது வேறெங்கும் இல்லாத ஒன்று. லட்சுமி, சரஸ்வதி, ராதா, திரிபுரசுந்தரி, சாவித்திரி என்னும் ஐந்து அம்பிகையின் அம்சமாக பகவதியம்மன் அருள்பாலிக்கிறாள். கிரக தோஷம் போக்கும் நவக்கிரக நாயகியாகவும் விளங்குகிறாள். நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ, தூரத்தில் மண்டைக்காடு உள்ளது.