பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
11:07
இடைப்பாடி: பூலாம்பட்டி, கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பூலாம்பட்டியில் புகழ்பெற்ற கைலாசநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களின் கோபுரங்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு, மூன்று கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தது.திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று, தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. இறையருள் நற்பணி மன்ற திருப்பணிக்குழு தலைவர் பாப்பி தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இறையருள் நற்பணி மன்ற செயலாளர் கணேசன், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தன், உழவர் மன்ற அமைப்பாளர் நடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.