பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
11:07
திருநெல்வேலி: முக்கூடல் அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி கோயிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.முக்கூடல் அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி கோயிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம், 2வது உக்த ஹோமங்கள், பூர்ணாகுதி நடக்கிறது. காலை 8 மணிக்கு மகா சாந்தி ஹோமம், 11 மணிக்கு சருஹோமமும், மாலை 6 மணிக்கு அக்னி ஆராதனை, பூர்ணாகுதி, த்விகுணாராதனம், தளிகை, சாற்றுமுறை நடந்தது.இன்று(13ம் தேதி) காலை 7 மணிக்கு திருமஞ்சனம், புண்யாகம், நித்தியலாராதனம், அக்னி ஆராதனம், 4வது வேளை பிரதான உக்த ஹோமங்களும், காலை மணிக்கு மகாசாந்தி சமித் ஹோமம், 11 மணிக்கு சருஹோமம் நடக்கிறது. மாலையில் 5வது வேளை பிரதான உக்த ஹோமங்கள், அஜ்ய ஹோமம் நடக்கிறது.நாளை(14ம் தேதி) காலை 7 மணிக்கு புண்யாகம், 6வது வேளை பிரதான உக்த ஹோமங்கள், பூர்ணாகுதி, தளிகையும் நடக்கிறது. தொடர்ந்து ராதா கல்யாணம், அபிதகுஜலாம்பாள் பஜன்மண்டலி சார்பில் நாராயணம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆலய விமான சுத்யர்த்த வாஸ்து ஹோமம், பிம்ப சுத்யர்த்த அதிவாஸத்ரய ஹோமம், நவகும்ப ஸப்த கலச திருமஞ்சனம், விமான சுத்யர்த்த சதுர்விம்ஸதி கலஸ்நபநம், மாலை 6 மணிக்கு 7வது வேளை பிரதான உக்த ஹோமங்கள் நடக்கிறது. 15ம் தேதி, காலை 5 மணிக்கு திருமஞ்சனம், புண்யாகம், நித்தியலாராதனமும், காலை 8 மணிக்கு மகாபூர்ணாகுதி, தசதானம், தட்சிணாதானம், யாத்ரா தானம், அக்நிம்கும்ப ஸவ்யோசனம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு கும்ப உத்தாபனம், கும்பம், பிம்பம், ஆலய மூலஸ்தானம் சேர்தல், காலை 9.50 மணிக்கு விமான ஸம்ப்ரோஷணமும், காலை 10 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து ஆராதனாங்க ஸநபநம், திருவாராதனம், தளிகை, சாற்றுமுறை நடக்கிறது. இரவு 9 மணிக்கு கருடசேவை நடக்கிறது.