பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
நெட்டப்பாக்கம்: மடுகரை, வேட்டைக்கார அய்யனாரப்பன், விநாயகர், பாலமுருகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 7.30 மணிக்கு கலசம் புறப்பாடு, 8.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பெரியசாமி எம்.எல்.ஏ., பாட்கோ சேர்மன் பிரசாந்குமார் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடுகரை என்.ஆர்.காங்., பிரமுகர் தனபூபதி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.ஏம்பலம்: நல்லாத்தூர், சாயல் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:45 மணிக்கு கோவில் விமான கும்பாபிஷேகம், 5:55 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்மான ஸ்தபதி அழகுமுத்து, நல்லாத்தூர் கிராம மக்கள் செய்தனர்.