பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
முக்கூடல்:ரெங்கசமுத்திரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி கோவில் அஷ்படந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.முக்கூடல் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாச்சலபதி கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஸயனேத்தாபனம், திருமஞ்சனம், புண்யாகசம், நித்தியலாராதனம், காலை 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, தசதானம், தஷிதாதானம், யாத்ராதானம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலஸ்தானம் தேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கருட சேவை நடந்தது.கும்பாபிஷேகத்தை கோபால பட்டாசார்யார், வெங்கட்ராம, சீனிவாச அய்யங்கார், ஆதிநாராயண அய்யங்கார் நடத்தினர்.ஏற்பாடுகளை சங்கரநாராயணன் செய்திருந்தார்.