அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் தயங்கி நின்றார். திடீரென ஒரு பெண்ணிடம் அறிமுகமாவது எப்படி என்பதே அத்தயக்கம். ராமனின் வரலாற்றை ஒரு கதைபோல இனிமையுடன் பாடத் தொடங்கினார். அதைக் கேட்ட சீதையின் முகம் மலர்ந்தது. இருந்தாலும் பாடியவன் ராவணனின் ஆளாக இருக்குமோ என்ற சந்தேகமும் உண்டானது. ஆனால், அனுமன், ராமசாமியின் தூதன் நான்!, என்று சொல்லி ராமரின் கணையாழி(மோதிரம்)யைக் காட்டியதும் முழுமையான நம்பிக்கை ஏற்பட்டது. சீதையும் தன்னிடமிருந்த சூடாமணியைக் காட்டி, பிரிவுத்துயரை நினைத்து வருந்தும்போதெல்லாம் ஆறுதல் தந்தது இந்த சூடாமணி தான். இதனை ராமனிடம் கொடு, என்றாள். அனுமனும் அதை பெற்றுக் கொண்டு, சீதாதேவியை மூன்று முறை வலம் வந்து வணங்கி விடைபெற்றார்.