புதுடில்லி: பேய்மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட, உத்தரகண்ட், கேதார்நாத் கோவிலுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என, இந்திய தொல்பொருள் ஆய்வினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தொல்பொருள் ஆய்வு மையத்தின் கண்காணிப்பாளர், அடுல் பார்கவ் கூறுகையில், கேதார்நாத் கோவில் கட்டடத்திற்கு எத்தகைய அச்சுறுத்தலும் இல்லை, கோவில் பாதுகாப்பாக உள்ளது. கடும் வெள்ளத்தில் கோவில் சிக்கியதால், கோவிலின் பிரதான கற்கள் இடம் மாறியுள்ளன. இவை, விரைவில் சரிசெய்யப்படும். நிபுணர்களின் ஆய்வுக்குப் பின்னரே, இடம் மாறிய கற்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.