பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
இறைவனே உலகிலுள்ள அனைவருக்கும் உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. ஒரு நாத்திகன் அவரிடம் வந்தான்.""கடவுளே அனைவருக்கும் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! உங்களுக்கு என்னைப் போன்ற சிலர் அல்லவோ உணவு தருகிறார்கள். மக்களிடம் வாங்கி சாப்பிடும் தாங்கள், அதை இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான்.ஞானி, தன் கருத்தில் தெளிவாக இருந்தார்.
""இல்லை அன்பரே! இறைவன் எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கிறான், என்றார்.""அப்படியானால், நான் ஒரு அறையில் உங்களை அடைத்து வைக்கிறேன். உங்களுக்கு இறைவன் உணவு தருகிறானா என்று பார்ப்போம், என்றான் அந்த இளைஞன்.""தம்பி! நீ புதிதாக என்னை அடைத்து வைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் வரை என் வீட்டில் சிறைப்பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. அப்போது, என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் குழந்தை, என்றார். ஆம்..தாயின் வயிற்றில் இருக்கும்போதும் நமக்கு உணவு கிடைக்கத்தானே செய்கிறது! எந்த வடிவில் உணவு கிடைத்தாலும், அது இறைவன் கொடுப்பதே ஆகும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25.