பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
சங்கராபுரம்: பூட்டை கிராமத்தில் மாரி யம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நேற்று காலை கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் மோகன், பாலப்பட்டு ஜாகீர் முத்துசாமி ஆகியோர் தேர் வடம் பிடித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., ராஜசேகர், சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் அரசு, துணை சேர்மன் திருமால், தாசில்தார் மணிவண்ணன், கோவில் அறங்காவலர் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜேந்திரன், குசேலன், மணிமாறன், கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், சம்சாத்பேகம் ஷாஜகான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.பூட்டை, செம்பராம்பட்டு கிராமத்தில் இன்றும், நாளையும் தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.