பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில் தேர் திருவிழா, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக நடக்கும். நடப்பாண்டு, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது.வரும், 24ம் தேதி கொடியேற்றமும், 31ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான முதல் வன பூஜையும் நடக்கிறது. ஆகஸ்ட், 7 முதல், 10ம் தேதி வரை ஆடி தேர் திருவிழா நடக்கும். மாட்டு சந்தை, குதிரை சந்தை, கேளிக்கை நிகழ்ச்சிகள் என நான்கு நாட்கள் நடக்கும். திருவிழாவை காண, தமிழகம், வெளி மாநிலத்தில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர். வரும், 14ல் பால் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்.