Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரகாண்டம் பகுதி-13 சுந்தரகாண்டம் பகுதி-15 சுந்தரகாண்டம் பகுதி-15
முதல் பக்கம் » சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் பகுதி-14
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2011
03:03

அப்போது, சில அரக்கிகள் கோடலிகளை தூக்கினர். சீதையை வெட்டுவதற்காகப் பாய்ந்தனர்.நாங்கள் உனக்கு ராவணனைப் பர்த்தாவாக அடையும் நன்மையைப் போதித்தால், நீ என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறாயே, என்று அதட்டினர். சில அரக்கிகளின் உதடுகள் சிவந்து தொங்கியதைப் பார்க்க கோர மாக இருந்தது. சீதாதேவி பயந்து போய் ஓடினாள்.  ஆஞ்சநேயர் ஒளிந்திருந்த சிம்சுபா மரத்தின் கீழ் வந்து நின்றாள். அப்போது சண்டோதரி என்பவள் ஒரு சூலத்தை அவள் முன் நீட்டி குத்திவிடுவது பாவனை செய்து, ஏ சீதா! இவளது கண்களையும், பயத்தால் நடுங்கும் மார்பையும் பார்க்கும்போது எனக்கு ஆசை மிக அதிகமாகிறது. அவற்றை இந்த சூலத்தால் தோண்டி தின்றால் என்ன? என்றாள். பிரகஸை என்பவள், இவள் என்ன சொன்னாலும் மசியமாட்டேன் என்கிறாள். எனவே, நாம் இவளை அடித்துக் கொன்று விடுவோம், பின்னர் ராவணனிடம் போய், நீ கொண்டு வந்த பெண் துக்கத்தால் இறந்துவிட்டாள் என சொல்லி விடுவோம். அவர் வேறு வழியின்றி இவளைத் தின்னச் சொல்லி விடுவார், என்று படுபயங்கரமான யோசனை ஒன்றைச் சொன்னாள். அஜாமுகி என்பவள், அதை ஆமோதித்து, சரி..சரி...நேரமாகிறது. இவளைச் சும்மா தின்ன முடியுமா? குடிக்க மதுபானங்கள், தொட்டுக்கொள்ள ஊறுகாய் முதலியவற்றைக் கொண்டு வாருங்கள். மதுவைக் குடித்து சகல துக்கங்களையும் மறப்போம். இவளைத் தின்னும் முன்பு, நம் நகர தேவதையான நிகும்பிலை (பத்ரகாளி) முன்னால் நடனமாடுவோம், என்றாள். சீதாதேவி கண்ணீர் விட்டாள். பெண்களே! மனுஷ்ய ஸ்தீரி ஒருத்தி, ராட்சஷனுக்கு மனைவியாவது என்பது எப்படி முடியும்? உங்கள் இஷ்டம் என்னைக் கொன்று தின்பது தானே! அதையே செய்யுங்கள்.

என் உயிருக்குப் பயந்து எக்காரணம் கொண்டும் ராவணனின் ஆசைக்கு இணங்க மாட்டேன், என்று தெளிவுபடச் சொன்னாள். பின்னர் ஸ்ரீராமனை மனதில் நினைத்து, தங்களை இனி நான் பார்ப்பது நடக்கிற காரியமல்ல, என்று சொல்லி அழுதாள். உயிர் பிரியப் போகும் நிலையில், ஸ்ரீராமா, ஹா லட்சுமணா! என் மாமியான கவுசல்யா தேவியே! சுமித்திராவே! என்று உறவையெல்லாம் நினைத்து கதறினாள். என் கணவனைப் பிரிந்த பிறகும், இந்த ராட்சஷிகள் இவ்வளவு தூரம் என்னை உபத்திரவம் செய்தும், தகாத வார்த்தைகள் பேசியும் கூட என் உயிர் பிரியமாட்டேன் என்கிறது. ஒரு பெண்ணோ, ஆணோ அவரவர் செய்த செயல்களுக்கேற்ற பாவத்தை அனுபவிக்காமல் அதற்கு முந்தியோ, பிந்தியோ இறப்பது என்பது நடக்காத காரியம் என்று பண்டிதர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அது நிஜம் என்பது இப்போது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல! பூர்வஜன்மத்தில் நான் புண்ணியமே செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான், காற்றில் சிக்கிய கப்பல் பாரம் தாங்காமல் கடலுக்குள்  மூழ்குவது போல நான் துன்பத்தால் அலைக்கழிக்கப்பட்டு உயிரை விடப்போகிறேன். ஒரு பெண் தன் உயிரை விடும்போது, அவள் அருகில் அவளது கணவன் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவாள். அந்த இன்பத்தைக் கூட பெறாத நான் எவ்வளவு பெரிய துர்பாக்கியசாலி! என்று புலம்பினாள். பார்த்தீர்களா! அந்த நாராயணனின் அவதாரமான ராமனின் பத்தினியாகும் அளவுக்கு புண்ணியம் செய்த சீதாதேவி தனக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கே, பூர்வ ஜென்ம வினையைக் காரணம் காட்டுகிறாள் என்றால், இந்த உலகத்தில் இப்போது நடக்கும் அட்டூழியங்களுக்கு அடுத்த பிறவியில் நாம் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறோமோ, நினைத்தாலே குலை நடுங்குகிறது. சுந்தரகாண்டம் இந்த இடத்தில் நமக்குச் சொல்லும் பாடம்,  கொஞ்சமாவது நாம் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைத்தான்! நெஞ்சமே உடைந்து போகும் வகையில் சீதாதேவி, தன் துக்கத்தை மனம் உருக்கும் வார்த்தைகளால் மேலும் வெளிப்படுத்தினாள்.

ராமா! தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா? இவள் காணாமல் போய் வெகுகால மாயிற்றே! இவள் எங்கே உயிருடன் இருக்கப்போகிறாள் என்று நினைத்தீர்களா?  உங்கள் பாணம் சகல லோகங்களையும் கடந்து செல்லக்கூடியதாயிற்றே! அப்படியிருக்க, இருந்த இடத்திலிருந்தே ஒரு பாணத்தைத் தொடுத்தாலே இந்த ராவணன் அழிந்திருப்பானே! ஒருவேளை மாரீசன் என்னை மாயைக்கு உட்படுத்தி, ராவணனிடம் சிக்க வைத்தது போல, ராமனையும் கொன்றிருப்பானோ? நீங்கள் உயிருடன் இல்லையோ? அப்படியானால், இந்த ராவணனின் கையில் சிக்கி மாள்வதை விட, நானே எனக்கு மரணத்தை வருவித்துக் கொள்கிறேன், என்றாள். உடனே அரக்கிகள் அவளை, அடியே சீதா! தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாயா? அதற்குள், உன்னை நாங்களே தின்று விடுகிறோம், என சொல்லியவாறே அருகில் வந்தனர். சில அரக்கிகள் சீதா தற்கொலை செய்துவிட்டால் ராவணன் தங்களைக் கொன்று விடுவானே என்ற பயத்தில்  அவனிடம் தகவல் சொல்ல ஓடினர். அப்போது ராவணனின் சகோதரன் விபீஷணனின் புத்திரியாகிய திரிஜடை என்ற அரக்கி அங்கே வந்தாள். அவளும் சீதையை மிரட்ட அனுப்பப்பட்டவள் தான்! ஆனால், சேற்றிலும் செந்தாமரை முளைப்பதுண்டு. எங்காவது ஓரிடத்தில் கலவரம் நடக்கிறதென்றால், நாம் ஓடி ஒளிய இடம் தேடி அலையும் போது, பல வீட்டுக்கதவுகளும் திறக்காது. ஆனால், எங்கோ ஒரு மூலையில், அந்த கலவரத்தில் பங்கேற்கும் ஒருவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே நமக்கு அடைக்கலம் தருவர். இப்படிப்பட்டவள் தான் திரிஜடை. அவள் அவ்வளவு நேரமும் உறங்கிக் கொண்டிருந்தாள். அரக்கிகளின் கொடூர சத்தம் கேட்டு விழித்தவள், சீதையை அவர்கள் துன்புறுத்திக் கொண்டிருந்ததைக் கண்டாள்.நிறுத்துங்கள்! இந்தப் பெண்ணை துன்புறுத்தாதீர்கள் இவளைத் துன்புறுத்தினால் வீணாக அழிந்து போவீர்கள்! என்று அரக்கிகளை எச்சரித்தாள்.

 
மேலும் சுந்தரகாண்டம் »
temple news
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்
 
temple news
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்
 
temple news
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்
 
temple news
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் ... மேலும்
 
temple news
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar