Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரகாண்டம் பகுதி-14 சுந்தரகாண்டம் பகுதி-16 சுந்தரகாண்டம் பகுதி-16
முதல் பக்கம் » சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் பகுதி-15
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2011
03:03

திரிஜடை! என்ன சொல்கிறாய்? இவள் மானிடப்பிறவி. இவளுக்கு துன்பமிழைப்பதால் நமக்கு என்ன கேடு நேர்ந்து விடும்? என ராட்சஷிகள் கேட்டனர். நீங்கள் நினைப்பது போல் இவள் சாதாரணமானவள் இல்லை. நான் அதிகாலை வேளையில் கண்ட கனவு இதை உறுதிப்படுத்துகிறது. அந்தக் கனவின்படி, ராட்சஷர்களுக்கு அழிவும், இவளது கணவனுக்கு வெற்றியும் கிடைக்கப்போகிறது, என்றாள் திரிஜடை. இதையடுத்து, அரக்கிகள் தீயில் பட்ட கையை பட்டென எடுப்பது போல் சட்டென விலகி நின்றனர். ஏனெனில், அதிகாலை கனவு என்றால் அரக்கிகளுக்கு கடும் பயம். அந்தக்கனவு பலித்து விடும் என்பது அவர்களது நம்பிக்கை.திரிஜடை! எங்களுக்கு பயமாக இருக்கிறது. நீ கண்ட கனவை எங்களுக்கு விபரமாகச் சொல், என்று கேட்டு திகிலுடன் நின்றனர். திரிஜடை அவர்களிடம்,இந்த பெண்ணின் பர்த்தாவான ராமன், தன் தம்பியுடன் வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை மலர்மாலை சூடி ஆகாயவழியில் இங்கு வந்தார். இந்த சீதையும் வெண்ணிற ஆடை அணிந்து க்ஷீர சமுத்திரத்தின் (தயிர்க்கடல்) மத்தியில் இருந்த வெள்ளை மலை ஒன்றில் அமர்ந்திருந்தாள். அப்போது நான்கு தந்தங்களை உடைய ஒரு பெரிய யானையின் மேல் ராமலட்சுமணர் இவளருகே வந்தனர் (யானை மீது வருவது போல கனவு கண்டால் கனவு காண்பவருக்கு சகல மங்களமும் உண்டாகும் என்கிறது ஸ்வப்னாத்தியாயம் என்னும் நூல்).ராமன் சீதையை தூக்கி அந்த யானையில் அமர வைத்தார். அவள் அங்கிருந்தபடியே சூரிய சந்திரரைத் தொட்டாள் (சூரிய சந்திரரை தொடுவது போல் கனவு காண்பவர் நாடாள்வார் என்பது நம்பிக்கை). பின்னர் ராமன் எட்டுக்காளைகள் பூட்டிய ரதத்தில் ஏறினார். பின்னர் சீதை மற்றும் லட்சுமணருடன் புஷ்பக விமானம் ஒன்றில் ஏறிச்சென்றார். நான்  ராமனையும், அழகே வடிவான சீதையையும், லட்சுமணனையும் கனவில் கண்டது என் பாக்கியம். ஏனெனில், அவர் நாராயணனின் வடிவம். முட்டாள் அரக்கிகளே! நாராயணனை வெல்ல யாரால் முடியும்? நீங்கள் இவளை விட்டுவிடுங்கள், என்றாள்.

அரக்கிகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.திரிஜடை தொடர்ந்தாள். இன்னும் கேளுங்கள்! ராவணன் சிவப்பு ஆடை அணிந்து ஒரு புஷ்பக விமானத்தில் இருந்து கீழே விழுந்தான். பின்னர், ஒரு தைலத்தை குடித்து சித்தப்பிரமை பிடித்து திரிந்தான். பின்னர் மொட்டைத்தலையுடன் கருப்பு ஆடை அணிந்து கழுதைகள் பூட்டிய தேரில் தானாக சிரித்தபடியே சென்றான். பின்னர்  வஸ்திரமே இல்லாமல் சேற்றில் விழுந்து மூழ்கி விட்டான். கும்பகர்ணன், ராவணனின் பிள்ளை இந்திரஜித் முதலை மீதும், கும்பகர்ணன் ஒட்டகத்தின் மீதும் தெற்கு நோக்கி பயணம்  செய்தனர். (தெற்கு எமதிசை). ராவணன் ஒரு பன்றியின் மேல் திடீரென வந்தான். ஆனால், விபீஷணன் (திரிஜடையின் தந்தை) யானையின் மீதேறி ஆகாயமார்க்கத்தில் சென்றான்.இந்த அறிகுறிகளால் நிச்சயமாக ராமன் இங்கு வந்துவிடுவார். நீங்கள் இவளை விட்டுவிட்டு ஓடி விடுங்கள். அல்லது இவளிடம் சமாதானமாகப் பேசி மன்னிப்பு கேட்டு பிரார்த்தியுங்கள், என்றாள். அப்போது ஒரு பறவை இடமிருந்து வலமாக பறந்து வந்து இறக்கைகளை விரித்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தது. அதை சுட்டிக்காட்டிய திரிஜடை, இதோ! பாருங்கள். இந்த பறவை காட்டிய அறிகுறியால் இவளுக்கு நன்மை நடக்கப்போகிறது. ராட்சஷ இனத்துக்கு ஏற்படப்போகும் அழிவை தடுத்து நிறுத்த நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள், என்றாள். பின்னர் சீதையின் அருகில் வந்து, சீதா! வருத்தம் வேண்டாம். நான் கண்ட கனவு பிரகாரம், உன் நாயகன் உன்னை மீட்பது உறுதி. நீ அலங்காரம் செய்து கொண்டு, உன் நாயகனின் வரவிற்காக காத்திரு, என்றாள். ஆனாலும், சீதை உயிரை விடவே முயற்சித்தாள். அந்த  சமயத்தில் பல சுப சகுனங்கள் தோன்றின. மகாலட்சுமியான சீதை உயிர் விடுவதா என்று எண்ணிய சகுனங்கள், அந்த  இக்கட்டான சமயத்தில் தங்களால் ஆன உபகாரத்தை அவளுக்குச் செய்து பெரும் பேறு பெற்றன. அவற்றால் அவளுக்குள் நம்பிக்கை பிறந்தது.

கிரகண நேரத்தில், ராகுவிடம் இருந்து விடுபட்ட சந்திரனைப் போல்  அவளது முகம் பிரகாசித்தது. மரத்தில் மறைந்திருந்த ஆஞ்சநேயர் அவளை சந்திரமுகி என மனதுக்குள் வர்ணித்தார். சந்திரனைப் போன்ற பிரகாசமான  முகமுடையவளே சந்திரமுகி. அவளுடன் பேசி, அவளைச் சமாதானம் செய்து, ராமனின் நிலையை எடுத்துச்சொல்ல எத்தனித்தார். ராட்சஷிகள் விலகட்டுமே எனக் காத்திருந்தார்.அப்போது அவரது மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.இவளுடன் நாம் சாதாரண  மனிதனைப் போல் வார்த்தைகள் பேசுவதா? அல்லது சமஸ்கிருதத்தில் உரையாற்றுவதா? குரங்கு ரூபத்தில் சமஸ்கிருதம் பேசினால், ராவணன் தான் மாறுவேடத்தில் வந்துள்ளானோ என இவள்  நம்மைச் சந்தேகிப்பாள். எனவே நம் உருவத்தைச் சுருக்கி, மானிடர் போல் பேசுவதே சிறந்ததென தீர்மானித்தார். வார்த்தைகள் மனிதனின் வாழ்வில் முக்கிய இடம் பிடிப்பவை. அதனால் திருவள்ளுவர், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்றார். நாக்கு பேசும் வார்த்தை ஒருவனைக் காப்பாற்றவும் செய்யும், அவனைக் கொன்றும் விடும். தெய்வத்தின் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வரும். மனிதனின் வாயில் இருந்து இரண்டும் கலந்து வரும். நல்லதை மட்டும் பேசினால் உயிர்கள் பிழைக்கும். அதனால் தான் குரங்காகப் பிறந்தாலும், ஆஞ்சநேயர் மனிதனைப் போல் பேச நினைத்தார். மானிடப்பிறவி மிகவும் உயர்ந்தது. இந்தப் பிறவியில் இருந்தே தெய்வநிலைக்கு உயர முடியும். ஆஞ்சநேயர் குரங்காய் பிறந்தாலும் சொல்லின் செல்வராக நன்மையையே பேசினார். அதிலும் மானிடனைப் போல் பேசினார். அதனால் இன்று தெய்வமாய் நம் முன்னால் நிற்கிறார். இதற்குள் ராட்சஷிகள் விலகி விட, சீதையின் காதில் மட்டும் கேட்பது போல், ராமனின் சரிதத்தை சொல்ல ஆரம்பித்தார். ராமனின் பெயரைக்  கேட்டதும் சீதாதேவியின் உடல் பரவசத்தால் ஆடியது.

 
மேலும் சுந்தரகாண்டம் »
temple news
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்
 
temple news
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்
 
temple news
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்
 
temple news
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் ... மேலும்
 
temple news
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar