சிதம்பரம்: வாகீசன் நகர் வல்லபி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் வாகீசன் நகர் வல்லபி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் வல்லபி மாரியம்மன் புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இன்று மாலை தீ மிதி திருவிழா நடக்கிறது.