கோவை: புலியகுளம் கார்மல் கார்டன் பள்ளியில் கார்மல் மாதா திருவிழா நடந்தது. இதில், கோவை மறைமாவட்ட பொருளாளர் லாரன்ஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. நிறைவில் நடந்த பரிசளிப்பு விழாவில், பள்ளி ஆசிரியர் சதானந்தம் வரவேற்றார். பள்ளி முதல்வர் மரிய ஜோசப் சிறப்புரையாற்றினார். பிஷப் அம்புரோஸ் கல்லூரி செயலாளர் மரிய இருதய நாதர் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, மறைமாவட்ட அளவில் நடந்த மறைக்கவி, நன்னெறி தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியை விக்டோரியா கொரியா நன்றி கூறினார்.