வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று தேரோட்டம் நடக்கிறது. ஜூலை 14 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள், ஊர் பிரமுகர்களால் அழைத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளுவார். தேரோட்டம் ரத வீதிகள் வழியே நகரை வலம் வரும். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. தாடிக்கொம்பு: சவுந்திர ராஜப்பெருமாள் கோயில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு அபி ஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச் சாமி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.