திண்டிவனம்: திண்டிவனம் கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா சன்னதியில் பாபாவின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு கற்பக விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், நவக்கிரக, சாய்பாபா மூல மந்திரம், அஷ்ட லக்ஷ்மி ஹோமம் நடந்தது. மணிகண்ட சாஸ்திரி தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.