நகரி: புத்தூர் திரவுபதி அம்மன் கோவில், 17 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன. சித்தூர் மாவட்டம், புத்தூர் ரயில் நிலையம் அருகில், தனியார் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு திரவுபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய, 17 லட்சம் ரூபாய் செலவில் வாகன மண்டபம், அக்னி குண்டம், அரிகதா, கூத்து மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டன. வளர்ச்சி பணிகள் முடிந்த நிலையில் நன்கொடையாளர்கள் சார்பில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கோவில் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.