காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருட சேவை உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2013 10:07
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மாதந்தோறும், கருடசேவை உற்சவம் நடைபெறும். இவற்றில், வைகாசி மாதம் மற்றும் ஆனி மாதத்தில் நடைபெறும் கருடசேவை உற்சவம் பிரபலமானது. ஆனி கருடசேவை உற்சவம் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ஆடி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.