முதுகுளத்தூர்: செல்வியம்மன் கோயில் 37வது ஆண்டு, பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம், வர்த்தக சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலும், மீனவரணி செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் நடந்தது. 300க்கும் மேற்பட்ட பெண்கள், செல்வியம்மன் கோயிலிலிருந்து, வழிவிடுமுருகன் கோயில், வடக்கூர், காந்தி சிலை வழியாக முளைப்பாரி எடுத்து வந்து, சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர்.