புதுச்சேரி: தாகூர் நகர், கம்பளி சுவாமி மடத்தில், யோக மகரிஷி டாக்டர் கீதானந்தா கிரி குரு மகரிஷியின் 106வது ஜெயந்தி விழாவையொட்டி, குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு, மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு யோக அஞ்சலி நாட்டியாலய மாணவ, மாணவியர்களின் இசை அஞ்சலி, இரவு 7:00 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மடாதிபதி ஆனந்த பாலயோகி, கஜேந்திரன், சண்முகம் செய்திருந்தனர்.