மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி, வனபத்ர காளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை 8.00 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. மதியம் 2.00 மணிக்கும், மாலை 5.00 மணிக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6.00 மணிக்கு அம்மன் ஆபரண அணிக்கூடையுடன் திருக்கோவில் தலைமை பூசாரி குமரேசனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு பூச்சாட்டு துவங்கியது. நெல்லித்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.