பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீர்த்ததொட்டியிலிருந்து பால்குடம் எடுத்துவந்து, அம்மனை வழிபட்டனர். பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட அபிஷேகங்கள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுதா மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.