பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
11:07
நகரி: நகரி அருகே, கண்ணொளி வழங்கும் தெய்வம் தேசம்மன் கோவிலில், ஆடிப்பூர இரண்டாவது வாரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சித்தூர் மாவட்டம், நகரி அடுத்துள்ள, திருமலை ராஜூகண்டிகை கிராமத்தில் அமைந்து உள்ளது தேசம்மன் கோவில். இங்கு, ஆடிமாதம் முதல் வாரத்தில் இருந்து, 10 வாரங்கள் வரை செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு, ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலங் களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் வைத்து, முடிக்காணிக்கை செலுத்தி வழிபடுவர். ஆடி மாத சிறப்பையொட்டி, கடந்த, 16ம் தேதி, செவ்வாய்கிழமை முதல், அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டாவது வாரத்தையொட்டி நேற்று முன்தினம்,செவ்வாய்கிழமை மூலவரான தேசம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டன. சித்தூர் மாவட்டம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதியிலிருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு வந்திருந்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.