பெருமாள் கோயில்களில் பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில்தான் இருப்பாள். ஆனால் உப்பிலியப்பன் கோயிலில் சுவாமிக்கு வலது புறத்தில் இருக்கிறாள். மகாவிஷ்ணு பூதேவியை திருமணம் செய்த தலம் என்பதால், மணப்பெண்ணுக்குரிய வலதுபுறத்தில் வீற்றிருக்கிறாள். இந்த தேவியை வேண்டினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.