வேலூர் மாவட்டம் வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோயிலில் ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்து காட்சி அளிக்கின்றனர். வீடு, கட்டடம் கட்டும் பணி தடையின்றி நடைபெறவும், கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடவும் இவர்களுக்கு பூஜை செய்வார்கள். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாக்கிச் சூட்டி எள் தீபம் ஏற்றி வணங்கினால், சனீஸ்வரர் கசப்பைப் போக்குவார் என்று நம்பப்படுகிறது.