ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சுமார் முப்பது கி.மீ தூரத்தில் உள்ள ஆகிரி பள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்மர் புலிமுகம் கொண்டவராகக் காட்சி தருகிறார். இவரை வ்யாக்ர நரசிம்மர் எனப் போற்றுவர். சோளிங்கரில் அருள்புரியும் நரசிம்மர் திருஉருவம் அக்காரக்கனி என்ற அரிய மூலிகைக் கலவையால் ஆனது. அதனால் இவருக்கு அபிஷேகம் இல்லை. பாண்டிச்சேரி அருகில் உள்ள சிங்கிகிரி ஆலயத்தில் நரசிம்மர், பதினெட்டு திருக்கரங்களுடன் உக்ர நரசிம்மராக அருள்புரிகிறார். நரசிம்மரின் எந்தத் திருக்கோலத்தைத் தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூன்யம், திருஷ்டி, திருமணத்தடை போன்றவை விலகி வாழ்வு வளம்பெறும்.