கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் நம் பிரச்னையை வெள்ளத்தாளில் எழுதி முருகப்பெருமானிடம் கொடுத்துவிட, கொளஞ்சியப்பர் காலடியில் அதை வைத்துக் கொடுப்பார் அர்ச்சகர். அருகிலுள்ள முனியப்பர் சன்னதி வேலில் அதைப் பொட்டலமாகக் கட்டிவிட, 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறினால், எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அங்கிருந்து கி.மீக்கு 10 காசு வீதம் கோயிலுக்கு படிப்பணம் கட்ட வேண்டும். வைகாசி விசாகத்தை முன்னிட்டு இங்கு 10 நாட்களுக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது!