நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி (பிரச்னைக்கு வரவேண்டாம்) என்று கூறிவிடுங்கள்,. அமைதியையும், சாந்தத்தையும் கடைபிடியுங்கள். ரமலான் நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்பு களையும் வளர்த்துக் கொள்வதாகும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்துமுதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. ""நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன், என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். ""நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள், என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள்.அமைதியாகப் பேச வேண்டும். பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனையாகட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26.