ஆடி வெள்ளி: மதுரையில் 1500 மாணவிகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2013 11:07
மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த விளக்கு பூஜை 30ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டு இந்த பூஜையை சிறப்பாக நடத்துகின்றனர். நாடு நலம் பெறவும், கல்வியின் தரம் உயரவும் இந்த பூஜை நடத்துவதாக மாணவிகள் தெரிவித்தனர்.