பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் சதுரகிரி மலை ஆடித் திருவிழாவையொட்டி, ஆக., 5 ம் தேதி இரவு 10 மணிக்கு பிறகு, மலை ஏற அனுமதி இல்லை, என, மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆக., 6ல் ஆடித் திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கு முதல்நாளே (ஆக.,5) பக்தர்கள் கூட்டமாக மலை ஏறத் துவங்குவர். குறுகிய மலைப் பாதையில் ஒரே நேரத்தில் பக்தர்கள் ஏறி, இறங்குவது சிரமம். ஆக., 5ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்குச் செல்ல முடியும். இரவு 11 மணி முதல், மறுநாள் காலை 5 மணி வரை, அனுமதி இல்லை, என்றார்.