பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராமநாத சுவாமி கோவிலில், உலக நன்மை, மழை வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே, ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், வடக்கு ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, பர்வதவர்த்தினி மகளிர் குழுவினர் சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.