ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில்: ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2013 10:07
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசுவாமி திருக்கோலம் கோயில் வலம் வருதல் நடந்தது. இன்று (29ம் தேதி) காலை சேர்ம விநாயகர் திருஉலா, இரவு 8 மணிக்கு திருஆல வாகனத்தில் குறி சொல்லுதல் கூத்தன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும் 6ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து 7ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 11 மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேருதல், கற்பூர தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.