திருச்செந்தூர்: திருச்செந்தூர் மேலத் தெருயாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது.திருச்செந்தூர் மேலத் தெருயாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி எடுத்துவரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு வில்லிசையும், 12.00 மணிக்கு குடியழைப்பு தீபாராதனையும், காப்புகட்டுதலும் நடந்தது. இன்று பகல் 12.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 1.30 மணிக்கு வானவேடிக்கையும் நடக்கிறது. நாளை அதிகாலை 4.00 மணிக்கு படைப்பு தீபாராதனையும், 7.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.எட்டயபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல்எட்டயபுரம், ஜூலை.30- எட்டயபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மூன்று லாரிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். எட்டயபுரம் மண்டல துணைதாசில்தார் ஜோதி ஆர்ஐ முத்துச்செல்வி கடலையூர் வி.ஏ.ஓ பெருமாள் மற்றும் வருவாய்துறை களப்பணியாளர்களுடன் எட்டயபுரம் தாலுகா பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனாட்சிபுரம் பகுதியில் மூன்று லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மூன்று லாரிகளையும் சிறைபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.