ஏழைகளுக்கு தானம் செய்வோம் ரமலான் நோன்பு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. நோன்பு காலத்தில் தொழுகையைப் போன்றே ஏழை வரியும் கட்டாயக் கடமையாகும். நமது சம்பாத்தியத்தில், அத்தியாவசியத் தேவை போக எஞ்சிய பணத்தில், நாற்பதில் ஒரு பங்காவது ஏழைகளுக்கு தானம் செய்வதே ஏழைவரி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே! அவர் நரகநெருப்பிற்கு ஆளாவார், என்கிறார்கள். அதே நேரம், தானம் செய்த பிறகு, ""நான் இவ்வளவு தர்மம் செய்தேன். தர்மத்தில் என்னை விஞ்சியவர் யாருமில்லை என பெருமையடிக்கவும் கூடாது. ""பிறர் பார்ப்பதற்காக தொழுதவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக நோன்பு நோற்றவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவன் இணை வைத்து விட்டான், என்கிறார்கள் அண்ணல் நாயகம். ரமலான் காலத்தின் கட்டாயக் கடமையான ஏழை வரியான தானத்தை உடனடியாக செய்யுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26