பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புற்றுமாரியம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு புற்றுமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு தீமிதி திருவிழா, சாகை வார்த்தல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு முத்துப்பல்லக்கில் புற்றுமாரியம்மன் வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சீனு என்கிற ராமதாஸ் செய்துள்ளார்