புதுச்சத்திரம்:வேளங்கிப்பட்டு மகிடசம்ஹாரி கோவிலில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு பகுதியில் மகிடசம்ஹாரி என்ற துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிமாத செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. அதனையொட்டி தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு செண்டை மேள வாத்தியம், காத்தவராயன் கதை சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.