நெட்டப்பாக்கம்:ஏரிப்பாக்கம் சுப்பரமணியர் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், கிருத்திகையையொட்டி காவடி பூஜை விழா, காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் துவங்கியது. 9:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு, தேர், கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், குழந்தைகள் காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி கார்த்திகேயன் மற்றும் ஏரிப்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்.