கிருமாம்பாக்கம்:தவளக்குப்பம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது. தவளக்குப்பம் முத்தாலம்மன் கோவில், 44ம் ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, காலை 6:00 மணிக்கு கரக வீதியுலாவும், மாலை 4:30 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது. தவளக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் செடல் போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு கும்பமிடுதல், 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.