காஞ்சிபுரம்:பெரியநத்தம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாத தீமிதி திருவிழா சிறப்பாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன், பொன்னியம்மன் ஆகிய கோவில்களில், ஆடி மாத திருவிழாவையொட்டி, நேற்று, மாரியம்மனுக்கு கூழ்வாத்தல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில், கிராம மக்கள் பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு, மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.