திருவாரூர்: நாகநாதசு சுவாமி கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் ஏகாதசியான ஆக 2, ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பாமணியில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ராகு -கேதுவிற்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, உளுந்து சாதம் வழங்கினால் தோஷங்கள் நீங்கி திருமண விருத்தி மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆக 2, வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையில், ஏராளமானோர் பங்கேற்று, சிறப்பு பூஜை நடத்தினர். மாலையில் அமிர்தநாயகி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.