காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தண்டு முத்துமாரியம்மன் கோவிலில், 108 பால் குட விழா நடந்தது.காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில், தண்டு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அறப்பெரும் செல்வி தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், 108 பால் குடங்களை, ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலையில் பொங்கலிட்டும் வழிப்பட்டனர்.