பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில், ஆடி அமாவசையையொட்டி, நூற்றுக் கணக்கான மாட்டு வண்டிகளில் சென்ற விவசாயிகள் அமணலிங்கேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். உடுமலை திருமூர்த்திமலை அமணலிங் கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டும், நேற்றுமுன்தினம் முதலே விவசாயிகள் தங்கள் மாட்டு வண்டிகளில், கோவிலுக்குச் சென்றனர். தொடர்ந்து, காலை முதல் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஆடிப்பட்ட சாகு டி சிறக்க வழிபாடு நடத்தினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திரண்டதால், கோவிலில், அதிகளவு கூட்டம் காணப்பட்டது. பாலற்றாங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உடுமலையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.