பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்தனர். அதிகாலை முதல், பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்த கூட்டம் அலைமோதியது. ஐந்து மணி நேரம் வரை, வரிசையில் நின்று, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு, 12:00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். ஊஞ்சல் தாலாட்டின் போது, அம்மன் தாலாட்டு மற்றும் பக்திப் பாடல்களை பாடினர். ஆடி அமாவாசை என்பதால், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன; இரண்டு லட்சத்திற்கும் அதிமான பக்தர்கள் குவிந்தனர். மேல்மலையனூரில் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி, வளத்தி, சிறுதலைப்பூண்டி சாலையில், 3 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.