பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம், நாளை நடக்கிறது. திருவிழா, கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. விழாவின், 5ம் நாள் காலை, மங்களசாசனம், கருடசேவை நடந்தது. 6ம் நாள், ஆண்டாள் மடியில், ரெங்க மன்னார், சயன நிலையில் காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம், நாளை காலை, 8:05 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு, ஆண்டாள், ரெங்க மன்னார் தேரில் எழுந்தருள்கின்றனர்.