சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப்.5ல் துவங்கி 3 நாட்கள் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2013 10:08
ஏர்வாடி:சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோயில் ஆவணிப் பெருங்கொடை விழா வரும் செப்.5ம்தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடக்கும் ஆவணி பெருங்கொடை விழா வரும் செப்.5ம்தேதி துவங்குகிறது. அன்று மாலை 4 மணிக்கு உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் அண்ணாமலை குருக்கள் தலைமையில் கும்ப அபிஷேக பூஜை நடக்கிறது. இரண்டாம் நாள் வரும் செப்.6ம்தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுடலையாண்டவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வந்து சாம படைப்பு தீபாராதனை நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு 6ம்தேதி இரவு காமராஜர் கலையரங்கத்தில் பட்டிமன்றம் நிகழ்ச்சி, திரைப்பட மெல்லிசை கச்சேரி நடக்கிறது. சுடலையாண்டவர் கலையரங்கத்தில் தஞ்சாவூர் ஞானஅந்தோணி குழுவினர் வழங்கும் கிராமிய நாட்டுப்புற கதம்ப நிகழ்ச்சி, அடுத்து திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது. 3ம் நாள் வரும் செப்.7ம்தேதி காலை 9 மணிக்கு சுவாமி வீதிவலம் வந்து பொங்கல் வழிபாட்டுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது,. ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.