ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சியில் வன்னியப்பர் சமேத சிவகாமியம்பாள் கோயிலில் இன்று (9ம் தேதி) நந்தி களபம் வைபவம் நடக்கிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோயில்களில் நந்தி களப வைபவம் நடப்பது வழக்கம். ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் ராமநதி ஆற்றின் கரையில் வன்னியப்பர் சமேத சிவகாமியம்பாள் கோயில் உள்ளது. இங்கு இன்று (9ம் தேதி) நடைபெறவுள்ள நந்தி களப வைபவத்தில் காலை கும்ப ஜெபம், வேதபாராயணம், மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் நந்தி பகவான் சந்தனக் காப்பு கோலத்தில் காட்சியளித்தல் வைபவமும் தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடக்கிறது.