பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடிப்பூரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், தேரோட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், தேரோட்டம், ஆக, 9 நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். காலை, 8:05 மணிக்கு, துவங்கிய தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள், "கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன், வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளைச் சுற்றி, காலை,10:45 மணிக்கு, தேர் நிலை சேர்ந்தது. தேர், கீழ ரதவீதியில வந்த போது, ஒரு மரக்கிளை முறிந்து, விழுந்ததில், போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசனுக்கு, தலையில் காயம் ஏற்பட்டது.